கொரோனா பீதி: இந்திய ஒலிம்பிக் குழு பயணம் ரத்து!
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் ஏராளமான மக்களை பலிக் கொண்டுள்ளது. பல நாடுகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில் ஒலிம்பிக் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், ஜப்பானின் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகளை சோதனை செய்ய செல்ல வேண்டிய இந்திய ஒலிம்பிக் பாதுகாப்பு சோதனை குழு தங்களது டோக்கியோ பயணத்தை ஒத்தி வைத்துள்ளது.
கடந்த வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காமலே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.