செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (08:09 IST)

ஈ சி ஆர் ரைடு பற்றி பேசிய நடிகர் – புன்னகைப் பூத்த விஜய் !

மாஸ்டர் ஆடியோ விழாவில் சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பற்றி பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நகைச்சுவை நடிகர் தினா.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள  ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பேச்சுக்கு அடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நகைச்சுவை நடிகர் தினாவின் பேச்சுதான்.

மேடையில் பேசிய தினா ‘இளைஞர்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். இப்ப எல்லார் கைலயும் பைக் இருக்கு. ஈ சி ஆர் ரோடு காலியாதான இருக்குன்னு அங்க அடிக்கடி ரைடு போகாதீங்க…. நான் சொல்றது பைக் ரைட’ எனக் கூறியதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். இதைக் கேட்ட விஜய்யே லேசாக புன்னகைப் பூத்தார்.

மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையின் ரெய்டு சென்று சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.