2வது டெஸ்ட் போட்டி: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்தியா தொடக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்துள்ளது
இந்த நிலையில் 27 ரன்கள் முதல் இன்னிங்சில் பின்தங்கியிருந்த இந்திய அணி சற்று முன் இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கிய்து. இதில் பத்தாவது ஓவரிலேயே கேஎல் ராகுல் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து 16வது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 26 ரன்களில் அவுட் ஆனார்
இதனை அடுத்து தற்போது புஜாரா மற்றும் கேப்டன் விராத் கோலி ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது