1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (15:02 IST)

எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்த ஓலா!- அடுத்த மாதம் முதல் விற்பனை!

பிரபல ஓலா நிறுவனம் தயாரித்துள்ள புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபடுவதாக முன்னதாக ஓலா நிறுவனம் அறிவித்திருந்தது, இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் தற்போது பல வண்ணங்களில் இரண்டு மாடல் எலெக்ட்ரிக் பைக்குகளை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு மாடல் எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் எஸ்1 மாடல் 99,999 ரூபாயும், எஸ்1 ப்ரோ மாடல் 1,29,999 ரூபாயும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.