திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (15:28 IST)

3ஆம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் விக்கெட்.. ஃபாலோ ஆன் ஆகுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க திணறி வருகிறது.
 
 நேற்றைய இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலையே கேஎஸ் பரத் அவுட் ஆனார்.
 
இதனை அடுத்து தற்போது களத்தில் ரகானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். சற்றுமுன் வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் ஃபாலோ ஆன் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ரஹானே இந்திய அணியின் மானத்தை காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
 
Edited by Siva