ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (15:18 IST)

மூன்றம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே விக்கெட்டை இழந்த இந்தியா…!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாளில் 5 விக்கெட்கலை இழந்து 151 ரன்கள் எடுத்தது. ரஹானே மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கே எஸ் பரத் தன்னுடைய விக்கெட்டை மேற்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்காமல் ஸ்காட் போலண்ட் பந்தில் இழந்தார்.

தற்போது ரஹானே 33 ரன்களோடும், ஷர்துல் தாக்கூர் 8 ரன்களோடும் விளையாடி வருகின்றனர், இந்திய அணி 167 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.