அரை சதத்தை மிஸ் செய்த ரோஹித் சர்மா: 5 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து உள்ளன
ரோகித் சர்மா மிக அபாரமாக விளையாடி கொண்டிருக்கும் நிலையில் 49 ரன்களில் சற்றுமுன் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு ரன்னில் அவர் அரை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது
இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் விளையாடி வருகிறார்கள் என்பதும் இந்திய அணி சற்று முன் வரை 74 ரன்கள் முதல் இன்னிங்சில் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்னும் ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஸ்கோரை விட லீடிங் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்