செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (11:50 IST)

முதல் இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த இந்தியா – கோஹ்லி படை வெற்றி நடை !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தரவரிசையில் இந்திய அணி யாரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் அணிகளுக்கான சாம்பியன் ஷிப் போட்டி இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு ஒரு உள்நாட்டுத் தொடரிலும் ஒரு வெளிநாட்டு தொடரிலும் விளையாடவேண்டும். இந்திய அணி தற்போது நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தரவரிசையில் 360 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகளே பெற்றுள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடிய தொடர்களில் மூன்று தொடர்களிலும் ஒரு போட்டியைக் கூட தோற்காமல் வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியை 2 - 0 கணக்கிலும் , தென் ஆப்ரிக்கா அணியை 3 -0 கணக்கிலும் வென்று மூன்றாவது தொடர் வெற்றியாக வங்காள தேசத்தை 2 - 0 வென்றுள்ளது குறிப்பிடத்தகக்து.