இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது
தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. ஒரு பேட்ஸ்மேன் ரிட்டர்யர் ஹர்ட்டும் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 89 ரன்கள் பின்னடைவில் உள்ள வங்கதேச அணியின் 4 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால் இந்திய அணி இன்னின்ங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது இதேபோல் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று
வரும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்து தற்போது 166 ரன்கள் பின்னடைவில் உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா வீழ்த்திவிட்டால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது
ஒரே நேரம் நடந்து வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது