திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (07:37 IST)

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!

india vs ireland1
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
நேற்றைய போட்டி டப்ளின் நகரில் நடந்த நிலையில் போட்டியின் இடையே திடீரென மழை பெய்தது. இதனால் 12 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.
 
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது.
 
109 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 9.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது/ இதனை அடுத்து இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
போட்டியில் அபாரமாக பந்து வீசிய யுஹேந்திர சாஹல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்