திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

ind w
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகள் தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
126 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.