செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (18:18 IST)

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம்: டாடாவின் சூப்பர் முயற்சி!

tata solar
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம்: டாடாவின் சூப்பர் முயற்சி!
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை கேரளாவில் அமைந்துள்ள டாடா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
நிலக்கரி தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மின் உற்பத்திக்கு மாற்று ஏற்பாடுகளை தேட வேண்டிய அவசியத்தில் நாடு உள்ளது.
 
இந்த நிலையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் முயற்சியை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள காயங்குளம் என்ற பகுதியில் உள்ள கழிமுகத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் மின் உற்பத்தி நிலையத்தை டாடா நிறுவனம் அமைத்துள்ளது.
 
நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமாக இது கருதப்படுகிறது. டாடா நிறுவனத்தின் இந்த முயற்சியை அடுத்து மேலும் சில நிறுவனங்கள் இதே போன்று மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.