அயர்லாந்துக்கு எதிரான 2வது போட்டி: 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி டப்ளின் நகரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. ராகுல் 70 ரன்களும், ரெய்னா 69 ரன்களும் குவித்தனர். இந்த நிலையில் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து, இந்திய் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இந்திய பந்துவீச்சாளர் சாஹல் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இவர் இந்த போட்டியில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். மேலும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும், கெளல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.