திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (16:39 IST)

டி20 போட்டி: இலங்கை அணி - பதிலடி கொடுக்குமா? பலத்த அடிவாங்குமா?

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
 
இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை துவங்குகிறது. முதல் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது போல டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 
 
ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி டி20 தொடரிலாவது வென்று ஆறுதல் அடைய திட்டமிட்டுள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வாய்ப்புள்ளது. நாளைய போட்டி, இரவு 7 மணிக்கு துவங்குகிறது. 
 
இந்தியா அணி வீரர்கள்:
 
ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்த்திக் பாண்டியா, மணிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், பும்ரா, தீபக் ஹூடா, பசில் தம்பி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட்.
 
இலங்கை அணி வீரர்கள்: 
 
திசாரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, மேத்யூஸ், குஷால் பெரேரா, குணதிலகா, டிக்வெல்லா, குணரத்னே, சமரவிக்ரமா, தசுன் ‌ஷனகா, சதுரங்க டிசில்வா, பதினரா, அகிலா தனஞ்செயா, சம்ரா, நுவன் பிரதீப், விஷ்வா பெர்னாண்டோ.