கிண்டி, வண்டி, தாண்டி, கெரெண்டி: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங்கின் தமிழ் டுவீட்
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கு பின் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 203 என்ற கடின இலக்கை விரட்டி வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த போட்டியில் பேட்டிங்கில் வாட்சன், ராயுடு, பில்லிங் ஆகியோர் தூள் கிளப்ப, பந்துவீச்சில் பிராவோ, ஹர்பஜன் ஆகியோர் கலக்கினர்.
இந்த நிலையில் நேற்றைய த்ரில் வெற்றி குறித்து ஹர்பஜன்சிங் போட்ட தமிழ் டுவீட் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது மட்டுமின்றி டுவிட்டரில் கடந்த பலமணி நேரமாக டிரெண்டிங்கில் உள்ளது. அந்த தமிழ் டுவீட் இதுதான்:
மெட்ராஸ்ல இருக்குது கிண்டி
நீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டி
நீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி
@chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ
போயிறுவியா என் ஏரியாவ தாண்டி
செம மேட்ச் மாமா
ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.