1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (07:59 IST)

தோல்வி அடைந்தாலும் பிரான்ஸ் வீரர் எம்பாபேவுக்கு குவியும் பாராட்டு!

embabe
தோல்வி அடைந்தாலும் பிரான்ஸ் வீரர் எம்பாபேவுக்கு குவியும் பாராட்டு!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு கடும் சவாலாக இருந்த பிரான்ஸ் அணி கடைசி நேரத்தில் பெனால்டி சூட்டில் மட்டும் கோட்டை விட்டதால் உலக கோப்பையை இழந்தது. இருப்பினும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியின் எம்பாபே அதிரடியாக அடுத்தடுத்து மூன்று கோல் போட்டு தனது அணிக்கு வலு சேர்த்தார் 
 
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒரு வீரர் மூன்று கோல்களை பதிவு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்று கோல்களை பதிவு செய்த எம்பாபே  வீரருக்கு தங்க காலணி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் உலக கோப்பை தங்க காலணி விருது பெற்றாலும் உலககோப்பையை பெற முடியவில்லை என்ற சோகமாக இருந்த எம்பாபேவுக்கு பிரான்ஸ் அதிபர் ஆறுதல் கூறினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த உலக கோப்பையில் மட்டும் எம்பாபே 8 கோல்களை பதிவுசெய்து உள்ளார் என்பதும் அதில் இறுதிப் போட்டியில் மட்டும் மூன்று கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஒரு தொடரில் அதிக கோல்களை பதிவுசெய்யும் வீரருக்கு தங்க காலணி விருது வழங்கப்படும் நிலையில் எனவே அந்த காலனி விருதை எம்பாபே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva