திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (16:59 IST)

அந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் மக்கள் என்ன இப்படி பாத்தாங்க- முகமது ரிஸ்வான் மகிழ்ச்சி!

பாகிஸ்தான் அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் முகமது ரிஸ்வான்.

2021 ஆம் ஆண்டு இவரும் கேப்டன் பாபர் அசாமும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றனர். பாகிஸ்தான், இந்தியாவை உலகக்கோப்பையில் வெல்வது அதுவே முதல்முறை.

இந்நிலையில் அப்போது வெற்றி பற்றி பேசியுள்ள முகமது ரிஸ்வான் “அந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தானில் நான் எந்த கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினாலும், என்னிடம் பணமே பெறுவதில்லை. அப்போதுதான் அந்த வெற்றி பாகிஸ்தான் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.