வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (16:15 IST)

தடை செய்யப்படுகிறதா ஐபிஎல் ஆட்டங்கள்? – நாளை நீதிமன்ற விசாரணை!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29ம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழுவீச்சில் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகள் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை காண குவியும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அது மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. மும்பையில் நடக்கவுள்ள முதல் நாள் ஆரம்ப போட்டிகளை ரத்து செய்ய மராட்டிய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும் என கங்குலி தெரிவித்தார். இந்நிலையில் ஐபிஎல்-க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.