வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (23:56 IST)

கல்நெஞ்சையும் கரைய வைத்த சிறுமியின் கண்ணீரை துடைத்த கவுதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். எந்தவித உணர்ச்சிகளையும் அவர் மைதானத்தில் காட்டியதில்லை. இந்த நிலையில் ஒரு சிறுமியின் கண்ணீர் அவரை கதிகலங்க வைத்துவிட்டது.



 
 
சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதிகள் வேட்டையில் உதவி துணை ஆய்வாளர் அப்துல் ரஷீத் என்பவர் வீர மரணம் அடைந்தார். தந்தையை பிணமாக பார்த்த அவருடைய மகள் ஜோரா கண்ணீர் விட்டது கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது.
 
ஜோராவுக்காக ஜம்முகாஷ்மீர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கவிதை ஒன்றை கண்ணீரால் எழுதி தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஜோராவின் படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவர் என்ன படிக்க விரும்பினாலும் எத்தனை லட்சம் செலவு ஆனாலும் அதற்கு நான் பொறுப்பு என்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.  என்னால் உனது தந்தையை கண்முன் நிறுத்த முடியாது. ஆனால் உன் தந்தையின் கனவை நிஜமாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.