அல்வா வாசு மகள் படிப்பிற்கு ரூ.1 லட்சம் தந்த விஷால்
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த அல்வா வாசுவின் குடும்பத்தினர் வறுமையின் பிடியில் இருப்பதால் அவருக்கு நடிகர் சங்கமும், தனிப்பட்ட முறையில் நடிகர்களும் உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது
இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் விஷால் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த பணம் அல்வா வாசு அவர்களின் மகள் கல்வி செலவுக்கு பயன்படும் வகையில் விஷால் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விரைவில் நடிகர் சங்கத்தின் மூலம் ஒரு தொகை அளிக்கப்படும் என்றும், தனிப்பட்ட முறையிலும் நடிகர்கள் பலரிடம் அல்வா வாசு குடும்பத்திற்கு உதவி செய்ய விஷால் கேட்டுக்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.