வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (16:03 IST)

கவுதம் காம்பீர் பற்றிய வதந்தி: லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் விளக்கம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் நீடிப்பார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் லக்னோ அணி சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராகப் பதவி வகித்து வருகிறார். அதேபோல், பாஜக எம்பியாகவும் பதவி வகித்து வருகிறார்.  .

'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாகவும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதாக'  இணையதளத்தில் வதந்தி பரவியது.

இந்த நிலையில், லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் இன்று ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது, அதில்,  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் நீடிப்பார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.