இதயம், சிறுநீரகம் பாதிப்பு! கவலைக்கிடமான நிலையில் பீலே!
பிரபல கால்பந்து ஜாம்பவனான பீலே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதயம், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டின் பிரபலமான முன்னாள் கால்பந்து வீரர் பீலே. கடந்த ஆண்டு பீலேவுக்கு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கீமோதெரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.
சமீபமாக உடல்நலம் பலவீனமடைந்த பீலே கடந்த மாதம் இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடலின் பல பாகங்களிலும் புற்றுநோய் முன்னேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீலே உடல் குணமடைய உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Edit By Prasanth.K