செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (13:59 IST)

விராத் கோஹ்லி பிடித்த அபார கேட்: ஆஸ்திரேலியா 83/5

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விராத் கோலி 74 ரன்களும் புஜாரா 43 ரன்களும் ரகானே 42 ரன்களும் எடுத்தனர் 
 
இந்த நிலையில் இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தொடங்கிய நிலையில் முதலில் நிதானமாக விளையாடினாலும் பும்ராவின் அபாரமான பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. லாபுசாஞ்சே மட்டும் ஓரளவுக்கு நீடித்து விளையாடி 42 ரன்கள் எடுத்துள்ளார் 
 
பும்ரா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதை அடுத்து சற்று முன் வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது. இதில் சற்று முன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிரீன் பேட்டிங் செய்தபோது அவர் அடித்த பந்தை விராட் கோலி அந்தரத்தில் பறந்து மிக அபாரமாக கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியை 161 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது