திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:38 IST)

4 வீரர்கள் அரைசதம்: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து உள்ளதை அடுத்து இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறது 
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பேர்ன்ஸ், ஹமீது, டேவிட் மாலன் மற்றும் ஜோரூட் ஆகிய நால்வரும் அரைசதம் அடித்து விட்டார்கள் என்பதும் இதில் மாலன் மற்றும் ரூட் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சற்று முன் வரை இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது