நான் தோனியா? ஜாம்பவானுடன் என்னை ஒப்பிடாதீர்! விளக்கமளித்த ரிஷப் பண்ட்!
தோனியோடு தன்னை ஒப்பிடாதீர்கள் என்று இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அந்த போட்டிகளில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டார்.
ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்திய அணியின் தோல்விக்கு அணியின் பந்துவீச்சும், பீல்டிங்-கும் சரியாக இல்லாததே காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த சில தவறுகளும் தோல்விக்கு முக்கியம் என்று பேசப்பட்டது.
ரிஷப் பண்ட் தோனியின் ஸ்டைலை காப்பியடித்து செயல்பட முயற்சித்து சரியாக ஆடவில்லை, அப்போது மைதானத்தில் இருந்தவர்கள் "தோனி, தோனி" என்று கூச்சலிட்டனர். மேலும் பலரும் சமூக வலைதளங்களில் பண்ட்டை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ள ரிஷப் பண்ட், "ஒப்பிடுவது பற்றி நான் எப்போதும் அதிகமாக யோசிக்க மாட்டேன். ஒரு வீரராக நான் தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறேன். தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான். ஆகவே அவரோடு என்னை ஒப்பிடவேண்டாம். மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதேபோல் விராட் கோலியிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்