வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (08:38 IST)

தோனி இல்லாததால் தோல்வி அடைந்த இந்தியா! டுவிட்டரில் டிரெண்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்திருந்தபோதிலும் 359 என்ற இலக்கை 47.5 ஓவரில் எட்டிய ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான அதிகபட்ச சேசிங் சாதனையையும் பதிவு செய்தது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக விளையாடிய ரிஷப் பண்ட் செய்த இரண்டு தவறுகளே தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தின் 39வது ஓவரில் ஹேண்ட்ஸ்கோப் கேட்ச் ஒன்றை ரிஷப் பண்ட் தவறவிட்டார். அதேபோல் 44வது ஓவரில் டர்னரை எளிதில் ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பையும் ரிஷப் தவறவிட்டார். நேற்றைய போட்டியில் இந்த இருவரும் தான் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து நேற்றைய போட்டியில் தோனி இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களும் டுவிட்டரில் உள்ள தோனி ரசிகர்களும் தங்களுடைய கருத்தை பகிர்ந்தனர். இதனால் நேற்று தோனி டுவிட்டரில் டிரெண்ட் ஆனார்.
 
தோனியின் அனுபவம் மற்றும் அபார விக்கெட் கீப்பிங் திறமைக்கு இணையான வீர்ர் இப்போதைக்கு இந்தியாவில் இல்லை என்பதால் அவரை மிஸ் செய்யாமல் இந்திய அணி விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.