செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:42 IST)

வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்; சாம்பியன் ஆன டோமினிக்! – அமெரிக்க ஓபன் டென்னிஸ்!

உலகளாவிய புகழ்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

உலகளவில் புகழ்பெற்றதும், க்ராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்றதுமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்றது. பல்வேறு நாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் சாம்பியன் நோவா ஜோக்கோவிச்சும் கலந்து கொண்டார்.

போட்டி ஒன்றில் கோபமாக பந்தை அடித்ததில் அது நடுவர் ஒருவரை காயப்படுத்தியதால் ஜோகோவிச் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் அதிகம் ஸ்கோர் செய்து மற்றுமொறு டென்னிஸ் ஜாம்பவானான அலெக்ஸாண்டர் ஸெரவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ஆஸ்திரிய வீரர் டோமினிக் திம்.

16 வருடங்களுக்கு பிறகு டென்னிஸ் போட்டிகளில் இரண்டாம் தரத்தில் உள்ள வீரர் ஒருவர் முதல் தர வீரர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதாக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.