செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (10:54 IST)

நேற்றும் தோனியால் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை! தொடரும் துரதிர்ஷ்டம்!

தோனி கொல்கத்தா அணியின் பவுலர் சுனில் நரேன் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை என மோசமான சாதனையை நேற்றும் முறியடிக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோப்பையை வென்ற அணிகளில் சென்னையும் கொல்கத்தாவும் உள்ளன. சென்னை 3 முறையும் கொல்கத்தா 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இன்று இவ்விரு அணிகளும் நேற்று மோதின. இந்த போட்டியில் எளிதாக கையில் இருந்த வெற்றியை சிஎஸ்கே கொல்கத்தா அணியிடம் தாரைவார்த்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் தோனி ஒரு மோசமான சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்காமல் போனது. சென்னை அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் தோனி கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் இதுவரை ஒரு முறை கூட பவுண்டரி அடித்ததில்லை. இதுவரை 59 பந்துகளை சந்தித்துள்ள அவர் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருமுறை அவர் பந்தில் அவுட் ஆகியுள்ளார். நேற்றைய போட்டியில் நரேனின் பந்துவீச்சில் சில பந்துகளை எதிர்கொண்ட தோனி பவுண்டரிகள் எதையும் அடிக்கவில்லை. இதனால் அடுத்த போட்டி வரை தோனி ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.