செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 அக்டோபர் 2020 (10:29 IST)

சுனில் நரேன் பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத தோனி – இன்று சிஎஸ்கே vs கே கே ஆர்!

சென்னை அணியின் கேப்டன் தோனி கல்கத்தா வீரர் சுனில் நரேன் பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது இன்று வரை ஒரு சாதனையாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோப்பையை வென்ற அணிகளில் சென்னையும் கொல்கத்தாவும் உள்ளன. சென்னை 3 முறையும் கொல்கத்தா 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இன்று இவ்விரு அணிகளும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் தோனி கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் இதுவரை ஒரு முறை கூட பவுண்டரி அடித்ததில்லை. இதுவரை 59 பந்துகளை சந்தித்துள்ள அவர் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருமுறை அவர் பந்தில் அவுட் ஆகியுள்ளார். இன்றைய போட்டியிலாவது பவுண்டரி அடித்து இந்த மோசமான சாதனையை உடைப்பார் தோனி என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.