வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (21:31 IST)

உலகில் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர் தோனி.. ரூ. 1 லட்சம் நிதி : நெட்டிசன்கள் கலாய் !

உலகில் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர் தோனி.. ரூ. 1 லட்சம் உதவி : நெட்டிசன்கள் கலாய் !

கொரொனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பல உதவிகளை செய்துவருகிறது. மாநில அரசுகளுக்கும் கை கொடுத்துவருகிறது.

இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வருடம் தோறும் உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலிலும்,  கிரிக்கெட் வீரர்கள் பட்டிலிலும் இடம் பிடிக்கும்  தோனி, கொரோனா  வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்ஸ் பலர், உலகில் அதிகம் சம்பாதிக்கும் பணக்கார கிர்க்கெட் வீரர்களில் ஒருவராக தோனி ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளதற்கு நெட்டிசன்ஸ் அவரை  விமர்சனம் செய்து கலாய்து வருகின்றனர்.