1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (14:28 IST)

எவ்வளவு சிக்ஸர்? தோல்வியடைந்த கொல்கத்தாவை மறைமுகமாக கேலி செய்த தோனி

கொல்கத்தா அணி 17 சிக்ஸர் அடித்தும் தோல்வி அடைந்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மறைமுகமாக கேலி செய்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரில் கடந்த 10ஆம் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியை சேர்ந்த ஆண்ட்ரூ ரஸல் மட்டும் 11 சிக்ஸர் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணி ஒட்டுமொத்தமாக 17 சிக்ஸர் அடித்தது.
 
சேஸிங் செய்த சென்னை அணி 14 சிக்ஸர் மட்டுமே அடித்தது. தொடர்ந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. இதனால் கேப்டன் தோனி மிகவும் மகிழச்சியில் உள்ளார். போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தோனி மறைமுகமாக கொல்கத்தா அணியை கேலி செய்துள்ளார்.
 
நிறைய சிக்ஸர்கள் செல்கிறது. ஐபிஎல் இதற்காக மைதானத்தை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 2 ரன்கள் கூடுதலாக தர வேண்டும் என்று கேலியாக கூறினார்.