வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (06:11 IST)

தவான் அதிரடி ஆட்டம்: கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி!

ஐபிஎல் போட்டியின் 26வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஷிகர் தவான் 63 பந்துகளில் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
 
இந்த வெற்றியால் டெல்லி அணி 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
கொல்கத்தா அணி: 178/7  20 ஓவர்கள்
 
கில்: 65 ரன்கள்
ரஸல்; 45 ரன்கள்
உத்தப்பா: 28 ரன்கள்
 
டெல்லி அணி: 180/3  18.5 ஓவர்கள்
 
தவான்: 97 ரன்கள்
ரிஷப் பண்ட்: 46 ரன்கள்
இங்க்ராம்: 14 ரன்கள்
 
ஆட்டநாயகன்: தவான்
 
இன்றைய போட்டி: மும்பை மற்றும் ராஜஸ்தான்