சிஎஸ்கே வெற்றி: ஹர்பஜன், இம்ரான் தாஹிர் அலப்பரை டுவீட்டுக்கள்

Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (08:45 IST)
சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன்சிங்கையும் இம்ராந்தாஹிரையும் கையில் பிடிக்க முடியாது. இருவரும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் அட்டகாசமான டுவீட்டுக்களை பதிவு செய்து அலப்பரை செய்வதுண்டு
அந்த வகையில் நேற்று பெரிதும் கடினமான போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்ட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எளிதில் வெற்றி கிடைத்தது. குறிப்பாக தீபக் சஹார், ஹர்பஜன், தாஹிர் ஆகியோர் சூப்பராக பந்துவீசினர்

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில், 'அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா! சிஎஸ்கே கிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போட வெச்சுருச்சா #தல வேட்டு! அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி! சிஎஸ்கே மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா' என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும். எங்கள எந்த பக்கம் உரசினலும் தீப்பிடிக்கும். பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல, எடுடா வண்டியை, போடுடா விசில்' என்று பதிவு செய்துள்ளார்.

ஹர்பஜன், தாஹிர் ஆகிய இருவரின் டுவீட்டுக்களுக்கும் லைக்ஸ்கள், கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :