செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (08:43 IST)

டி 20 உலகக்கோப்பையில் டிவில்லியர்ஸ் – கேப்டன் டு பிளசீஸ் பேச்சுவார்த்தை !

மாஸ்டர் சேம்பியனான  டிவில்லியர்ஸ் மீண்டும் டி20 அணியில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டூ பிளசீஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டார். அந்நாட்டு வாரியத்துக்கும் அவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளே இதற்குக் காரணம். ஆனால் அதன் பின் இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் வாரியம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்க அணியும் லீக் போட்டியிலேயே வெளியேறியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அந்த அணியின் கேப்டன் டூ பிளசீஸ் இது குறித்து டிவில்லியர்ஸோடு பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியுள்ளார்.