3 வது டெஸ்ட்டில் ரஹானே அசத்தல் சதம் ! ரசிகர்கள் ஆரவாரம் ... பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா

Ajinkya Rahane
sinojkiyan| Last Modified ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (11:03 IST)
தென் ஆப்பிரிக்க  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டியிலும்   இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 3 வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் இன்று , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும்  2 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிவீரர் ரஹானெ சதம் அடித்தார்.
 
நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் ரோஜித் சர்மாவும் . ரஹானேவும் ஆட்டத்தின் போக்கை கனித்து நிதானமாக் ஆடினர். நேற்றைய நாள் ஆட்டத்தின்ரோஹித் சர்மா சதம் அடித்தார். ஸ்கோரும் சீராக  உயர்ந்தது. 
 
இந்த நிலையில் இன்று, ரஹானே சதம் அடித்தார். இது அவரது 11 வது சதமாகும். இவர்கள் 4 வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு இணையான வல்லமை கொண்டது  தென் ஆப்பிரிக்க  அணி. ஆனால் சமீப காலமாக அந்த அணியில் பார்ம் இல்லாமல்  தோற்று வருவது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :