1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 6 மே 2023 (12:17 IST)

7ல் 5 வெற்றி.. சேப்பாக்கத்தில் மும்பை அணியின் ஆதிக்கம்.. இன்றும் தொடருமா?

Mumbai Indians
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இதுவரை 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி உள்ள நிலையில் இன்றைய போட்டியில் அந்த ஆதிக்கம் தொடருமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியான இந்த போட்டி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மும்பை அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 7 போட்டிகளில் மோதிய நிலையில் ஐந்தில் மும்பையும் இரண்டில் மட்டுமே சென்னையும் வென்று உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெறுமா அல்லது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.
 
Edited by Mahendran