வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (13:20 IST)

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமின் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Hari Padman
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஹரிபத்மன் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஹரிபத்மனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துளார்.
 
எனவே பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் கிடைக்க ஜூன் 16ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.
 
Edited by Mahendran