வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (14:19 IST)

இன்று மாலை 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று மாலை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருகிறது என்பதால் பொதுமக்கள் குளிர்ச்சியான வெப்பநிலையை அனுபவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று மாலை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல்,  கிருஷ்ணகிரி மற்றும்  திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அந்த மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva