புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:28 IST)

பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம்.. தோனியின் பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களை பாராட்டுகிறோம் என தோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இர்பான் பதான், அபாரஜித், ராபின் உத்தப்பா மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்கள் எடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு இன்னமும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபற்றி நேற்றைய போட்டி முடிவில் தோனி பேசியுள்ளார்.

அதில் ‘கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் அணியில் பெரிய மாற்றம் இல்லாமல் விளையாடி வருகிறோம். பெஞ்சில் இருக்கும் வீரர்களை பாராட்டுகிறோம். உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக்கை வையுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.