செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (08:10 IST)

இந்திய கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால் குறைந்து வந்த கொரொனா பாதிப்பு சமீக காலமான அதிகரிகத்துவருகிறது.

இந்நிலையில்,  மார்ச் 31 ஆம் தேதிவரை இந்திய அரசு கொரோனாகால ஊரடங்கை நீட்டித்து கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  இந்தியக்  கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு  இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுனில் சேத்ரி கூறியுள்ளதாவது: நான் நலனுடன் இருக்கிறேன். அதனால் ரசிகர்கள் பயப்பட வேண்டாம். நான் விரைவில் குணமடைய  பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.