இன்னும் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது – இந்திய வீரரின் நிலைமை!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக இன்னும் 6 மாதங்களுக்கு விளையாட முடியாது என சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறினார். அதையடுத்து அவரின் காயம் இன்னும் ஆறவில்லை. இதனால் அவர் சர்வதேச தொடர்களை இழந்துள்ளார். இந்நிலையில் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் இப்போதைய நிலவரப்படி அவர் இன்னும் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என சொல்லப்படுகிறது. அவர் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில்தான் கலந்துகொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.