தோல்விக்குப் பின் இந்திய வீராங்கனை பவானி தேவி உருக்கமான டிவிட்!
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.
டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள் சண்டை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வியுற்று வெளியேறியுள்ளார். பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். முன்னதாக இன்று காலை நடந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.
தோல்விக்கு பின்னர் அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள் வீச்சில் வென்ற முதல் வீராங்கனையானேன். ஆனால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
கடினமாக பயிற்சி செய்து அடுத்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று என் நாட்டை பெருமையடைய செய்வேன் எனக் கூறியுள்ளார்.