திமுக காரரின் மகளா இந்த சார்பட்டா நடிகை!
சார்பட்டா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை துஷாரா.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றன. அதில் ஆர்யாவின் மனைவியான மாரியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷாராவின் கதாபாத்திரம் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக திமுகவினர் துஷாராவை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடாத குறைதான். ஏனென்றால் துஷாரா திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் என்பவரின் மகளாம். ஏற்கனவே எமெர்ஜென்சியை திமுக தைரியமாக தனியாளாக எதிர்த்து நின்றது என்று படத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.