1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (19:51 IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல்: பிசிசிஐ வெளியீடு..!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை சற்றுமுன் பிசிஐ வெளியிட்டுள்ள நிலையில் அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வீரருக்கான வருடாந்திர பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் 7 கோடி சம்பளம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஏ பிரிவில் ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஷமி ஆகியோர்களுக்கு 5 கோடி சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் பி பிரிவில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர்களுக்கு 3 கோடி சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ரிங்குசிங், திலக் வர்மா, ருத்ராஜ், ஷர்துல், தூபே, ரவி பிஸ்னாய், ஜித்தேஷ், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப், பர்த், ப்ரசித் கிருஷ்ணா, ஆவேஸ்கான், படிதார்  ஆகியோர்களுக்கு சி பிரிவு என்றும், அவர்களுக்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
Edited by Mahendran