1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (19:48 IST)

ஆஷிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரார்ங்கனைகள் பதக்கம் வென்று சாதனை

asia champian ship
கஜகஸ்தானில் நடந்து வரும் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில்,  இந்திய வீராங்கனை மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.

இப்போட்டியில், 10-10 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியா வீராங்கனை தெல்கர்மமா என்க்சாய்கானை காலிறுதிப் போட்டியில் வீழ்த்தி, அரையிறுதியில் சீனா வீராங்கனை பெங் ஜாவை வீழ்த்தினார்.

இதையடுத்து, இறுதிப்போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை இஷி  நிஷாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

அதேபோன்று,  மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரியா வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில், ஜப்பானின் மிஜூகி நாகஷிமாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று பதக்கம் வென்றார்.

இப்போட்டியில், இந்தியாவில் மொத்தப் பதக்கம் 6 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, ரூபின் ( 55 கிலோ எடைப்பிரிவு) வெள்ளிப்பதக்கமும்,  நீரஜ் ( 63 கிலோ எடைப்பிரிவு),, விகாஸ்( 72 கிலோ எடைப்பிரிவு), சுனில்குமார்( 87 கிலோ எடைப்பிரிவு) வெண்கலப்பிரிவில் பதக்கமும் வென்றனர்.