ஆசிய கோப்பை ;பங்கள்தேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் !
ஆசிய கோப்பையில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிர்க்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோலாகலமாக நடந்து வருகிறது.
இத்தொடரின் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று பங்களதேஷ் அணிக்கு எதிராக ஆஹ்கானிஸ்தான் அணி மோதியது.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஷாகிப் அல் ஹசான் தலைமையிலான பங்களதேஷ் அணியினர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
இதில், 6 ஓவர்களில் 28 ரன் களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து மோசமான தொடக்கத்தைக் கொடுத்த பங்களதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன் கள் எடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு 131 வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் எடுத்ததார். இதையடுத்தது பேட்டிங் செய்த ஆப்கான் அணியில் சாசி 23 ரன்களும், சார்டன் 42 ரன்களும், நாஜிபுல்லா 42 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர்.
எனவே 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் கள் எடுத்து பங்களதேஸ்க் அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.