வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

சிட்னி டெஸ்ட்: இன்றைய கடைசி நாளில் இங்கிலாந்து வெல்லுமா?

ஆஷஸ் தொடரின் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஜனவரி 5ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 265 ரன்களும் எடுத்துள்ளது.
 
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்தது அடுத்து அந்த அணி வெற்றி பெற 388 என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து உள்ளன என்பதும் இன்னும் வெற்றிக்கு 266 ரன்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய கடைசி நாளில் இங்கிலாந்து அணி தேவையான ரன்களை எடுத்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.