தொடங்கியது ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து திணறல்!
தொடங்கியது ஆஷஸ் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து திணறல்!
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது
பிரிஸ்பேன் நகரில் தொடங்கியுள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தத்தளித்து வருகிறது என்பதும் 4 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலிய அணியின் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் கம்மிங் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது