1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (19:34 IST)

இந்திய அணியில் சச்சின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் கடவுளாக மதிக்கப்பட்டவர் சச்சின் தெண்டுல்கர் என்றால் அது மிகையில்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஊடகங்களில் சச்சின் குறித்த செய்திகள் வெளிவராமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் என்றாலே சச்சின், சச்சின் என்றாலே கிரிக்கெட் என்று அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த நிலையில் சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 19 வயதுக்குள்ளான இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார். வரும் ஜூலை மாதம் இந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரும் இலங்கை அணியுடன் மோதவுள்ள வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
18 வயதான அர்ஜுன் தெண்டுல்கர் இடதுகை மீடியம்பேஸ் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் பேட்டிங்கில் சாதனை செய்தது போன்று அர்ஜூன் தெண்டுல்கர் பந்துவீச்சில் சாதனை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்