1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (15:31 IST)

உலகக்கோப்பை கால்பந்து போட்டி; அர்ஜெண்டினா, நெதலாந்து அணிகள் தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் முதற்கட்டமாக அர்ஜெண்டினா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில் போட்டியை நடத்தும் கத்தார் மட்டுமே நேரடியாக விளையாடும். மீதியுள்ள 31 நாடுகளும் தகுதி சுற்றின் வழியாக மட்டுமே போட்டிக்குள் நுழைய முடியும்.

இதற்கான தகுதி போட்டிகள் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கி நடந்து வரும் நிலையில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினா மற்றும் ஐரோப்பிட நாடான நெதர்லாந்து ஆகியவை முதற்கட்டமாக உலகக்கோப்பை தகுதி சுற்றில் வென்று உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகியுள்ளன.